மெட்டா நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் மலேசியா!
ஃபேஸ்புகின் தாய் நிறுவனமான மெட்டா மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலேசியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்கள், அதன் சமூக ஊடகத் தளத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறியமைக்காக மேற்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவதூறு, ஆள்மாறாட்டம், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மோசடி விளம்பரங்கள் தொடர்பான “கணிசமான அளவு விரும்பத்தகாத உள்ளடக்கங்கள் ஃபேஸ்புகில் இருப்பதாகவும், இதனால் இளையவர்கள் பாதிக்கப்படுவதாகவும் லேசிய தகவல் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை அகற்ற மெட்டாவைத் தொடர்புகொள்ள பல தடைவைகள் முயற்சிக்கப்பட்டதாகவும், அது பலனளிக்கவில்லை எனவும் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில், மெட்டாவிடமிருந்து போதுமான ஒத்துழைப்பு இல்லாததால், மெட்டாவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.