லூவ்ரே (Louvre) கொள்ளை சம்பவம் – மேலும் 03 சந்தேகநபர்கள் கைது!
 
																																		பிரான்ஸில் உள்ள லூவ்ரே (Louvre) அருங்காட்சியத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ( Paris) பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக லாரே பெக்குவாவின் (Laure Beccuau) அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 19 ஆம் திகதியன்று உலகின் பிரபலமான அருங்காட்சியத்தில் ஒன்றான லூவ்ரே அருங்காட்சியத்தில் கொள்ளையர்கள் சுமார் 88 மில்லியன் யூரோஸ் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
வெறும் ஏழு நிமிடங்களில் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவம் பிரான்ஸை உலுக்கியது. தற்போதுவரை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கைப்பற்றப்படவிலை. கைது நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
        



 
                         
                            
