இந்தியா செய்தி

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை வந்த அமெரிக்க விமானப்படை.

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் நோக்கில் அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை… ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ரக விமானங்கள் இன்று (டிசம்பர் 07, 2025) இலங்கைக்கு வந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த விமானங்கள் விசேட பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய திறன்களுடன் வந்துள்ளனர். இந்தத் குழுமத்தில் “374வது ஏர்லிஃப்ட் விங், 36வது கன்டின்ஜென்சி ரெஸ்பான்ஸ் குரூப் மற்றும் III மரைன் எக்ஸ்பெடிஷனரி ஃபோர்ஸ்” ஆகியவற்றின் குழுக்கள் உள்ளடங்குகின்றன. இவர்கள், இலங்கை விமானப்படைப் பிரிவுகளுடன் நெருக்கமாக இணைந்து, விமானப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவார்கள். கட்டுநாயக்க இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்த அமெரிக்கக் குழுவினரை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், மாண்புமிகு ஜூலி சங் பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர இலங்கை விமானப்படை சார்பில், திட்டமிடல் பணிப்பாளர் நாயகம், ஏர் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வா ஆகியோருடன் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வரவேற்றனர்

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!