மண்சரிவு அபாயம் – கேகாலை மாவட்டத்தில் சில குடும்பங்கள் வெளியேற்றம்!
கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல, ரத்தகல மற்றும் ஹட்டனில் உள்ள ரோசெல்ல மாணிக்கவத்த காலனியில் வசிக்கும் பல குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, ருவன்வெல்ல, ரத்தகல பகுதியில் உள்ள 11 குடும்பங்கள் ரத்தகல ஆரம்பப் பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதேபோல், ரொசெல்ல மாணிக்கவத்த காலனியில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.





