உயர் மருத்துவ சிகிச்சைக்காக கலீதா ஜியாவின் லண்டன் பயணம் ஒத்திவைப்பு
வங்காளதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரும் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியாவின்(Khaleda Zia) மருத்துவ விமானம் தாமதமானதாலும் அவரது உடல்நிலை சிறிது மோசமடைந்ததாலும் மேம்பட்ட சிகிச்சைக்காக லண்டனுக்குச் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல்(Mirza Fakhrul) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வங்காளதேச ஊடக நிறுவனமான UNBயிடம் பேசிய மிர்சா ஃபக்ருல், கத்தார்(Qatar) எமிரால் வழங்கப்பட்ட சிறப்பு விமான ஆம்புலன்ஸ் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக டாக்காவிற்கு(Dhaka) வராததால் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலீதா ஜியா ஐக்கிய இராச்சியத்திற்கு(United Kingdom) செல்வாரா என்பது குறித்த இறுதி முடிவு பயண நாளில் அவரது உடல்நிலையைப் பொறுத்தது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர்





