அவசர கருத்தடை மாத்திரையை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்த ஜப்பான்

ஜப்பான் முதன்முறையாக அவசர கருத்தடை மாத்திரையை மருந்துச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மாத்திரை “வழிகாட்டுதல் தேவைப்படும் மருந்து” என்று பெயரிடப்பட்டுள்ளது, அதாவது பெண்கள் ஒரு மருந்தாளரின் முன்னிலையில் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது பொதுவாக பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அது எவ்வளவு விரைவில் எடுக்கப்படுகிறதோ அவ்வளவு பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ASKA Pharmaceutical நிறுவனம், நோர்லெவோ (Norlevo) என்ற வர்த்தக முத்திரையின் கீழ் அவசர கருத்தடை மாத்திரையை வழங்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், வாங்குபவர்களுக்கு வயது வரம்புகள் இருக்காது மற்றும் பெற்றோரின் ஒப்புதல் தேவையில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.