ஆசியா செய்தி

பெய்ரூட் வானில் பறந்த இஸ்ரேலிய போர் விமானங்கள் – அச்சத்தில் மக்கள்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

அதேபோல் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர் ராணுவ கமாண்டர் ஃபவத் சுக்ர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா சூளுரைத்துள்ளது.

ஹிஸ்புல்லாவை ஈரான் பின்புறத்தில் இருந்து இயக்கி வருகிறது. இதனால் லெபனானில் இருந்து இஸ்ரேலை ஈரான் ஆதரவுடன் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இஸ்ரேல் போர் விமானம் 30 நிமிடத்திற்கும் மூன்று முறை சத்தம் எழுப்பியவாறு பெய்ரூட் நகரில் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் பொது இடங்களில் நின்றிருந்த மக்கள் சிதறியடித்து பாதுகாப்பான இடத்திற்கு ஒடினர்.

லெபனானில் மோசமான நிலை நிலவி வருவதால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!