சூறாவளி தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் – காசாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காசாவை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி போல் தாக்குவோம என, இஸ்ரேல் இராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு இடையேயான போர், இரண்டு ஆண்டை எட்ட உள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் உயரமான கட்டடங்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேஸ் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று கூறியுள்ளதாவது:
பிணைக் கைதிகளை விடுவித்துவிட்டு, ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால், சக்திவாய்ந்த சூறாவளி போல காசாவை தாக்குவோம்; அது பெரும் அழிவை சந்திக்க நேரிடும். கோபுரங்கள் தகர்க்கப்படும் என இவ்வாறு அவர் கூறினார்.
(Visited 9 times, 9 visits today)