ஹமாஸின் சுரங்கபாதைகளில் எஞ்சியவற்றையும் அழிக்க இஸ்ரேல் திட்டம்!

காசாவில் ஹமாஸால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளில் எஞ்சியவற்றையும் அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா தலைமையிலான “சர்வதேச பொறிமுறையின்” கீழ் இந்த நடவடிக்கை நடத்தப்படும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேலின் மிகப்பெரிய சவால் காசாவில் உள்ள அனைத்து ஹமாஸ் பயங்கரவாத சுரங்கப்பாதைகளையும் அழிப்பதாகும்” என்று இஸ்ரேல் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நீடித்த இரண்டு ஆண்டுகால போரில் பல உள்கட்டமைப்புகள் மற்றும் ஹமாஸின் முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)