முஜிபுர் ரஹ்மானுக்கு அச்சுத்தலா? வீட்டை நோக்கிவரும் மர்ம நபர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தனது வீட்டிற்கும் உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்ததாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் குறைபாடுகளை கடுமையாக விமர்சிப்பதால் தமது பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளதுடன், இதுபோன்ற சூழலில், அரசாங்கத்துடன் தொடர்புடைய பெலவத்தை மக்கள் குழு ஒன்று தனது வீட்டிற்கு தெரியாத நபர்களை அனுப்பி தன்னை மிரட்ட முயற்சிப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்ற அதிகாரிகள் யார் என்பது மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரியாது.
கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் நுகேகொடையின் மிரிஹான பிரிவைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தனது வீட்டிற்குச் சென்றதாகவும், அப்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் தான் பங்கேற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.





