அணுவாயுதப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈரான் – அமெரிக்கா

அணுவாயுதங்களைத் தயாரிப்பது தனது நோக்கமல்ல என ஈரான் அறிவித்துள்ளது.
இதனால் ஈரானும் அமெரிக்காவும் அணுவாயுதப் பதற்றத்தைத் தணிக்கும் சாத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அணுச்சக்தி குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்கா விரும்புகின்றது.
முன்னதாக அமெரிக்காவும் ஈரானும் ஐந்துமுறை அணுச்சக்திப் பேச்சுவாத்தையை நடத்தின.
ஜூன் மாதம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாள் போர் நடந்ததால் பேச்சுவார்த்தை முடங்கியது.
ஈரான் ஒருபோதும் அணுக்குண்டு தயாரிக்க முயலாது என்று அந்நாட்டு அதிபர் மசூத் பெஸஸ்கியான் ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச்சபையில் கூறினார்.
ஈரானைக் காயப்படுத்தும் எண்ணம் இல்லை என்று அமெரிக்காவுக்கான மத்திய கிழக்குத் தூதர் Steve Witkoff குறிப்பிட்டுள்ளார்.
(Visited 17 times, 1 visits today)