ஆஸ்திரேலியா செய்தி

மெல்போர்ன் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம் குறித்து வெளியான தகவல்

மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது விமானத்தில் சுமார் 300 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பயணிக்க தொடங்கிய விமானத்தின் இரு சக்கரங்கள் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

இதனால், இரவு 7 மணிக்குப் பிறகு மெல்போர்ன் விமான நிலையத்தில் 3 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தீயினால் சேதமடைந்த விமானம் தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது.

தீ பரவலை கட்டுப்படுத்த விமான நிலைய தீயணைப்பு பிரிவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிஹாட் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொழில்நுட்பப் பிழை என்றும், அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதன் ஊழியர்கள் விபத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியுள்ளது.

இந்த சம்பவத்தால் சிரமத்திற்கு ஆளான பயணிகளிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கே எங்கள் முன்னுரிமை என்று கூறினார்.

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி