கூகுளிடம் மக்கள் அதிகமாக கேட்ட கேள்வி தொடர்பில் வெளியான தகவல்
கூகுளிடம் மக்கள் அதிகமாக கேட்ட கேள்வி தொடர்பில் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகளாவிய அளவில், மக்கள் கூகுளில் என்ன தேடுகிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விடயமாகும்.
மக்கள் தேடும் சில கேள்விகள் மிக பொதுவானவையாகும். ஆனால், சில கேள்விகள் மிகவும் தனித்துவமானவை.
இந்த நிலையில் 2024 மற்றும் அதற்குமுன்னர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சில கேள்விகள் தொடர்பான விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
“என்ன பார்க்க வேண்டும்?” – 6,200,000 பேர் தேடியுள்ளனர்
“எனது பணத்தைத் திரும்பப் பெறுவது எங்கே?” – 3,400,000 பேர் தேடியுள்ளனர்
“இதன் அர்த்தம் என்ன?” – 2,900,000 பேர் தேடியுள்ளனர்
“எனக்கு எப்போது பணம் கிடைக்கும்?” – 1,800,000 பேர் தேடியுள்ளனர்
“எனது தொடருந்து எங்கே?” – 1,500,000 பேர் தேடியுள்ளனர்
“கிறிஸ்துமஸ் வர எத்தனை நாட்கள்?” – 1,400,000 பேர் தேடியுள்ளனர்
“இது என்ன நேரம்?” – 1,400,000 பேர் தேடியுள்ளனர்
“2024 தேர்தலில் யார் வென்றார்கள்?” – 1,300,000 பேர் தேடியுள்ளனர்
இந்தக் கேள்விகள் எல்லாம் மனிதர்களின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. மக்கள் தகவலுக்காக, உதவிக்காக, சில நேரங்களில் வெறும் சுவாரசியத்திற்காகவே கூட கூகுளை நாடுகின்றனர்.





