இலங்கை உத்தேச வாடகை வருமான வரி தொடர்பில் வெளியான தகவல்

உத்தேச வாடகை வருமான வரி இந்த நாட்டின் 90% மக்களுக்கு நன்மை பயக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (19) கசினோக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்கள் தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள பணக்காரர்களில் 10% மட்டுமே இந்த வரி விதிக்கப்படும் எனவும் 10% பணக்காரர்களிடம் இருந்து அறவிடப்படும் பணம் ஏனைய 90% மக்களின் தேவைக்கே செலவிடப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த வரி தொடர்பில் சாதாரண மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் வலியுறுத்துகின்றார்.
(Visited 11 times, 1 visits today)