செய்தி விளையாட்டு

T20 வரலாற்றில் இந்திய அணியின் சூப்பர் ஓவர் சாதனை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று மோதின. முதலில் விளையாடிய இந்தியா 202 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 203 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, பதுன் நிஷாங்காவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி நோக்கி சென்றது.

இலங்கை 20 ஓவர் முடிவில் 202 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இதன் காரணமாக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இலங்கை 2 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. பின்னர் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு இது 5ஆவது சூப்பர் ஓவர் போட்டியாகும். இந்த ஐந்து போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

200ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

2020ல் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு முறை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

2024ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.

தற்போது இலங்கைக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி