பிரதமர் மோடியை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
கடந்த வாரம் இந்தியாவின் நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) அவர்கள் சந்தித்துள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணி, பதக்கங்கள் மற்றும் வெற்றி கோப்பையுடன் டெல்லியில்(Delhi) உள்ள லோக் கல்யாண் மார்க்கில்(Lok Kalyan Marg) உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமரை சந்தித்தனர்.
ஆரம்பத்தில் 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து பின்னர் மீண்டு வந்து மகளிர் உலகக் கோப்பையை வென்றதற்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)





