இங்கிலந்தில் இந்திய வம்சாவளிப் பெண் கொடூரமாக குத்தி கொலை
இங்கிலாந்தில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே ( 66). இவர் தேசிய சுகாதார சேவையில் மருத்துவ செயலாளராக பகுதி நேரமாக பணியாற்றி வந்தார்.
இவர் வடமேற்கு லண்டனில் உள்ள எட்க்வேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று கத்தியால் அனிதாவை சரமாரியாக குத்தினார். மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்திய பெண்னை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை கைது செய்தனர். அவர் 22 வயதான ஜலால் டெபெல்லா என்பது தெரிய வந்தது.
அவர் மீது கொலை மற்றும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் எதற்காக இந்திய பெண்ணை கொலை செய்தார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனிதா முகேவின் குடும்பத்தினர் கூறும்போது, அனிதா முகே தனது குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தார். அவரது மரணம் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றார்.