கொழும்பில் களமிறங்கினார் ஜெய்சங்கர்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை (22) கொழும்பை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் தலைமையிலான இலங்கை குழுவினர், இந்திய பிரதிநிதிகளை வரவேற்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெற்றுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.
இந்நிலையில் மேலதிக உதவி திட்டங்களை ஜெய்சங்கர் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.





