இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன், விராட் கோலி 76 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் சுழல் பந்துவீச்சில் அந்த அணி திணறியது.
இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.