முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்தியா
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதின.
நாணய சுழற்சியை வென்று தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில் ஷபாலி வர்மா(Shafali Verma) 87 ஓட்டங்களும் இறுதியில் தீப்தி ஷர்மா(Deepti Sharma) 58 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில், 298 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும்இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் லாரா வால்வார்த்(Laura Wolvaardt) 101 ஓட்டங்களும் அன்னெறி டெர்க்க்சன்(Annerie Dercksen) 35 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ஓட்டங்களால் வீழ்த்தி முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
மேலும், போட்டிக்கான ஆட்ட நாயகி விருதை ஷபாலி வர்மாவும்(Shafali Verma) தொடரின் ஆட்ட நாயகி விருதை தீப்தி ஷர்மாவும்(Deepti Sharma) வென்றுள்ளனர்.





