யூதர்களுக்கு எதிரான சம்பவங்களை சகித்து கொள்ள முடியாது: ரிஷி சுனக்

இஸ்ரேலின் கடந்த வார தாக்குதலை அடுத்து, பிரித்தானியாவில் உள்ள யூதர்களுக்கு எதிராக 105 சம்பவங்கள் நடந்துள்ளது.
இது குறித்து கவலை தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக யூதர்களுக்கு எதிரான சம்பவங்கள் இங்கு அதிகரிப்பது சகித்து கொள்ள கூடியது அல்ல. யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் தேவைப்படும் பாதுகாப்பை அளிக்க அதிக நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகுப்பினரும் அமைதியாக வாழ்வதை உறுதி செய்ய காவல்துறைக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ அவையனைத்தும் செய்து தரப்படும். அமைதியை குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது சட்டம் முழு பலத்துடன் பாயும் என்று தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)