ஆஸ்திரேலியா மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஆஸ்திரேலியா மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது ஒரு வருடத்திற்கு காட்டப்படும் வைப்புத் தொகை 24,505 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தொகையில் இருந்து 17 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த மதிப்பு தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக் குறிகாட்டிகளைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகிறது மற்றும் கடைசியாக இந்தத் தொகை 2019 இல் திருத்தப்பட்டது.
இதனிடையே போலி கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியேற்ற சட்ட ஆலோசகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
50 சதவீதத்திற்கும் அதிகமான விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப் போகிறது.
ஆஸ்திரேலிய குடிவரவு சட்டங்கள் எதிர்காலத்தில் இன்னும் பல விரிவான மாற்றங்களுக்கு உள்ளாகும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.