ஜெர்மனியில் வேலை செய்ய முடியாதவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
ஜெர்மனியில் வேலை செய்ய முடியாதவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்ஜெர்மனியில் வேலை செய்ய முடியாதவர்களுக்கு வழங்கப்படும் சமூக உதவி அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி வேலைக்கு செல்ல முடியாத நிலையில், உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் முன்னதாகவே ஓய்வு ஊதியத்தை பெறுகின்றவர்களுக்கு இந்த அதிகரிப்பு ஏற்படவுள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து இவர்கள் பெற்றுக்கொள்ளுகின்ற ஓய்வு ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் இவ்வாறு விண்ணப்பம் செய்தவருக்கு சாதகமான முறையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய காரணத்தினால் பின்னர் இந்த புதிய நடைமுறையானது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2001ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இவ்வாறு குறிப்பிடப்பட்ட ஓய்வு ஊதியத்துக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஒரு நிதியத் தொகையானது அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய சட்டத்தின் படி குறிப்பிடப்பட்ட ஓய்வு ஊதியத்தை பெறுகின்றவர்களுக்கு குறிப்பாக 37 யூரோ 60 சென்ட் மேலதிகமாக வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
இதுவரை காலமும் 4.5 புள்ளிகள் என்ற விகிதத்தில் இந்த ஓய்வு ஊதியமானது வழங்கப்பட்டதாகவும் எதிர்வரும் காலத்தில் குறிப்பாக முதலாம் திகதியில் இருந்து இந்த புள்ளியானது 7.5 ஆக அதிகரிப்பு காணுகின்றது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சலுகையானது முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.