ஐரோப்பா செய்தி

UKவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

பிரித்தானியாவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டில்  சராசரியாக £436 பவுண்ட்ஸை வட்டியாக பெறுவார்கள் என நேஷன்வைட் பில்டிங் சொசைட்டி (Nationwide Building Society) தெரிவித்துள்ளது.

கட்டிட சங்கம் (biggest building society) நடத்திய சமீபத்திய ஆய்வில், நாட்டில் உள்ள பெரியவர்கள் வரும் ஆண்டில் சராசரியாக £7,535 பவுண்ட்ஸ் சேமிப்பார்கள் எனக் கண்டறிந்துள்ள நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆய்வின் ஒரு பகுதியாக மக்களின் சேமிப்பு விருப்பங்களை அளவிடுவதற்காக இங்கிலாந்து முழுவதும் 2,000 க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில் 25-34 வயதுடையவர்கள் 14,912 பவுண்ட்ஸ் சேமிப்பதை இலக்காகக் கொண்டுள்ளனர். இருப்பினும், யதார்த்தத்தின்படி இந்த குறிப்பிட்ட வயதினரில் 35 சதவீதமானோர் இந்த ஆண்டு முழுவதும் £5,000 க்குக் குறைவாகவே சேமிப்பார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பதிலளித்தவர்களில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு பேர் முந்தைய ஆண்டை விட தங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் பெரியவர்களில் 10 இல் ஒருவருக்கு அடுத்த ஆண்டில் சேமிக்கும் திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஆண் மற்றும் பெண் சேமிப்பாளர்களிடையே அவர்களின் இலக்குகளைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. ஆண்கள் சராசரியாக £9,360 சேமிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் பெண்கள் £5,826 பவுண்ட்ஸை சேமிப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!