கண்டிக்கு வந்தால் அடித்து விரட்டுவோம் – மைத்திரி தலைமையில் கூடிய கூட்டத்தில் ஆதரவாளர்கள் ஆவேசம்
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் கட்சித் தலைமைத்துவத்துடன் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச பிரதிநிதிகள் கூட்டம் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்றது.
“ஜனாதிபதி தேர்தலுக்கு வருகிறேன். நாங்கள் வெற்றி பெறுகிறோம் அதன்பிறகு, என் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் அரசியல் சாசனத்தால் ரத்து செய்யப்படுகின்றன.
அப்போது கட்சித் தலைமை குறித்து எந்தப் பிரச்னையும் இருக்காது. கட்சியின் தலைவர்கள் என கூறி பதவிகளை வகிப்பவர்கள் கண்டிக்கு வந்தால் அடித்து விரட்டியடிப்பதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.