பேரிடரால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? திங்கள் மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு!
பேரிடரால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை உலக வங்கியால் கையளிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,
“ பேரிடரால் ஏற்பட்ட மொத்த இழப்பு தொடர்பான உத்தேசத்தை மேற்படி அறிக்கைமூலம் அறியமுடியும்.
500 பில்லியன் ரூபா மேலதிக நிதி சந்தைக்குவரும்போது ஏற்படும் பணவீக்கம் தொடர்பான காரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மேம்பட வேண்டும். அது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.” – என்றார் ஜனாதிபதி.





