ஐரோப்பா செய்தி

ஹிட்லருக்கு காதலி கொடுத்த பென்சில் ஏலத்தில் விற்பனை

ஜெர்மானி சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லருக்கு சொந்தமான ஒரு வெள்ளி முலாம் பூசப்பட்ட பென்சில் அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் மிகவும் குறைந்த விலைக்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிக்கப்பட்ட தொகையில் பத்தில் ஒரு பங்கு தொகைக்குக்கே விலைபோயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பென்சில் ஹிட்லரின் 52வது பிறந்தநாளில் ஏப்ரல் 20, 1941 அன்று அவரது காதலி ஈவா பிரவுன் அவருக்குப் பரிசளித்ததாக ப்ளூம்ஃபீல்ட் ஏல நிறுவனம் சொல்கிறது.

அந்தப் பென்சிலில் AH என்ற அடோல்ஃப் ஹிட்லர் பெயரின் முதல் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பென்சில் 5,400 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது.

எவ்வாறாயினும், 50,000 பவுண்டுகள் முதல் 80,000 பவுண்டுகள் வரை இந்த பென்சில் விலைபோகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதில் பத்தில் ஒரு பங்கு தொகைக்குத்தான் அது ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

அந்தப் பென்சில் பென்சில் முதலில் 2002 இல் ஒரு அரும்பொருள் சேகரிப்பாளரால் வாங்கப்பட்டது. இத்துடன் நாஜி ஜெர்மனி தொடர்புடைய பிற பொருட்களும் ஏலத்திற்கு வந்தன.

ஹிட்லரின் கையொப்பமிடப்பட்ட புகைப்படம், நாஜிகளுடன் தொடர்புடைய பல பொருட்கள், நாஜிகளின் ஸ்வஸ்திக் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவையும் ஏலமிடப்பட்டன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!