அபுதாபியில் இந்து கோயில் – பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி

அபுதாபி அமைக்கப்பட்டுள்ள இந்து கோயிலில் நேற்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முறையாக கட்டப்பட்ட இந்து கோயிலை கடந்த மாதம் 14-ஆம் திகதி பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
பாப்ஸ் சுவாமிநாராயண சன்ஸ்தா என்ற அமைப்பால் 700 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கோயிலில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளிநாட்டு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் முதல் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும் எனவும், திங்கட்கிழமை மூடப்பட்டிருக்கும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)