கனடிய மத்திய சுகாதார அலுவலகம் சளிக்காச்சல் தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை

கனடாவில் சளிக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனடிய மத்திய சுகாதார அலுவலகம் சளிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அண்மைய நாட்களில் சளிக்காய்ச்சல் தொற்று பரவுகை கூடுதலாக பதிவாகி வருவதாக ரொறன்ரோ மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோய்த் தொற்று பரவுகையை தடுக்கவும், நோய்த் தொற்றிலிருந் பாதுகாத்துக் கொள்ளவும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்திற்கு மாகாணம் சளிக்காய்ச்சல் தொற்றாளர் எண்ணிக்கை மாறுபட்ட அளவில் காணப்படுவதாக கனடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.எவ்வாறெனினும் கூடிய விரைவில் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது ஆபத்துக்களை தவிர்க்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)