ஐ.சி.சியின் நவம்பர் மாத சிறந்த வீரர்களாக ஹார்மர் மற்றும் ஷஃபாலி வர்மா தெரிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) இந்த ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை பட்டியலை கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், கடந்த மாதத்துக்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அந்தவகையில், இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனது உத்வேகமான பந்துவீச்சிற்காக தென்னாப்பிரிக்க(South Africa) சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர்(Simon Harmer) ஆண்கள் விருதை வென்றுள்ளார்
மேலும், ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா(Shafali Verma) பெண்கள் விருதை வென்றுள்ளார்.




