இலங்கையின் வெல்லம்பிட்டி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு
இலங்கையின் மேற்கு மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வெல்லம்பிட்டி(Wellampitiya) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் சாலையில் கைக்குண்டு(hand grenade) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான ஒன்றைக் கண்டதாக வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்ததில் கைக்குண்டு பழையது மற்றும் வேலை செய்யும் நிலையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த இடத்திற்கு இந்த கைக்குண்டு எவ்வாறு வந்தது என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)




