இஸ்ரேலின் மீறல்கள் -போர் நிறுத்தத்தை அச்சுறுத்துவதாக ஹமாஸ் குற்றச்சாட்டு
இஸ்ரேலின் அப்பட்டமான மற்றும் மூர்க்கத்தனமான மீறல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அச்சுறுத்துவதாக ஹமாஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அர்-ராம் நகரில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காசாவில், புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தங்குமிடங்களை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் அதன் நடவடிக்கைகள் குறித்த விசாரணையைத் தடுக்க இஸ்ரேலின் சட்டப்பூர்வ சவால்களில் ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் சுமார் 70,667 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 171,151 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



