ஹமாஸ் அமைப்பினர் தமது ஆயுதங்களை களைந்து நிராயுதபாணியாக வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹமாஸ் அமைப்பினர் தமது ஆயுதங்களை களைந்து நிராயுதபாணியாக வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், பலவந்தமாக ஆயுதங்களை களைய வேண்டியிருக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மில்லியுடன் (Javier Milley) வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் ஆயுதங்களை களைவு விரைவில் நடைபெறும் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கா முன்வைத்த சமாதான உடன்படிக்கைக்கு அமைய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு போர் ஓய்வினை அறிவித்துள்ளனர்.
அதன்துடன் பரஸ்பர கைதிகள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஹமாஸ் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. எனினும் ஆயுத களைவுக்கு ஹமாஸ் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





