மத்தியப் பிரதேசத்தில் 4 மாத பேத்தியை கொலை செய்த பாட்டி

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டம் சியோனி மால்வாவின் பர்கேடி கிராமத்தில் ஒரு பாட்டி தனது நான்கு மாத பேத்தியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப வாரிசாக ஆண் குழந்தையை எதிர்பார்த்த பாட்டி அதிருப்தியில் பேத்தியை கொலை செய்துள்ளதாக அறியப்படுகிறது.
மீனாபாய் அஸ்வரே என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, முற்றத்தில் ஊஞ்சலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது வாயில் துணியை திணித்து மூச்சுத் திணறடித்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் தாய் மீரா, வீட்டின் பின்னால் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, மீனாபாய் குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி வீட்டிற்கு அருகிலுள்ள வறண்ட கிணற்றில் வீசியுள்ளார்.
குழந்தை காணாமல் போனதை குடும்பத்தினர் கவனித்தபோது, கிராமவாசிகளும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்
சிறுமியின் தாத்தா நிர்பய் சிங், கிணற்றில் சந்தேகத்திற்கிடமான மூட்டையைக் கண்டார், ஆனால் மீனாபாய் அதில் மாதவிடாய் துணிகள் இருப்பதாகக் கூறி தடுக்க முயன்றுள்ளார்.
பின்னர் பொலிஸார்மூட்டையை திறந்தபோது, ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.