தீவிரமடையும் போர் பதற்றம்! அதிகரிக்கும் டிரோன் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா போரில் ட்ரோன் தாக்குதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி கட்டிடம் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது. அ தில் சிலர் காயமடைந்தனர்.
பதிலுக்கு ரஷ்யாவும் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே மிகப்பெரிய அணையை குண்டு வைத்து தகர்த்ததாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது.
இன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள வோரோனேஜ் நகரில் இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும், 3 பேர் காயம் அடைந்ததாகவும், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





