பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் பற்றிய மகிழ்ச்சியான செய்தி
அரசாங்க வர்த்தமானியின் பிரகாரம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் மொத்த நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக உயர்த்துவதற்கு தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தீர்மானித்திருந்தார்.
எவ்வாறாயினும், பெருந்தோட்ட கம்பனியும், தோட்ட முதலாளிமார் சங்கமும் இவ்வாறான சம்பள அதிகரிப்புக்கு சம்மதிக்க மாட்டோம் என தொடர்ந்தும் தெரிவித்தன.
இந்தநிலையில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மாத்தளை அல்கடுவ தோட்ட நிறுவனம் இன்று நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, இன்று பிற்பகல் மாத்தளை அல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி தலைமை அலுவலகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பள கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர் சங்கம் எல்பிட்டிய நகரில் போராட்டம் ஒன்றை நடத்தியது.