கஞ்சா செடிகளை மேய்ந்து போதைக்கு அடிமையான ஆடுகளால் ஏற்பட்ட பதற்றம்!
இந்தியாவில் கஞ்சா முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில குறிப்பிட்ட நாடுகள் மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. அங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கஞ்சா வளர்க்கப்படுகிறது.
அப்படியொரு விசித்திரமான சம்பவம் கிரீஸில் நடந்துள்ளது. இங்கு கஞ்சா செடிகளை சாப்பிட்டது மனிதர்கள் அல்ல, ஆடுகள். மருத்துவ நோக்கங்களுக்காக பயிரிடப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவை பசியால் வாடிய ஆடு மந்தை ஒன்று சாப்பிட்டுள்ளது.
கிரேக்கத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய டேனியல் புயல் கடந்து செல்லும் போது இந்த சம்பவம் நடந்தது.
அப்போது ஒரு நாள் ஆடுகள் விசித்திரமாக நடந்து கொள்வதனை விவசாயி அவதானித்துள்ளார். ஆடுகள் திடீரென துள்ளிக் குதித்து, நடனமாடுவது போல் நடந்து, விடாமல் சத்தம் எழுப்பி ஆடுகள் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளன .