உக்ரைனுக்கு பணம் கொடுப்பது முழு ஐரோப்பாவிற்கும் முக்கியமானது – போலந்து!
முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களை பயன்படுத்தி உக்ரைனுக்கு நிதியளிப்பதை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) ஆதரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் 185 பில்லியன் பெறுமதியான ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி உக்ரைனுக்கு நிதியளிப்பதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூடவுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் டஸ்க் (Donald Tusk), இந்த முடிவு உக்ரைனுக்கு மட்டுமல்ல, முழு ஐரோப்பாவிற்கும் முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பியத் தலைவர்கள் ஒன்றுப்பட வேண்டும் எனக் கூறியுள்ள அவர், ரஷ்யாவின் போரை அர்த்தமற்றதாக பிற தலைவர்களின் ஆதரவை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று பணம் இல்லையென்றால் நாளை இரத்தத்தை சிந்த வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பித்தக்கது.





