ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில் இலவச 30 நாள் விசா திட்டம் – பிரதமர் மோடி
இந்தியாவிற்கும்(India) ரஷ்யாவிற்கும்(Russia) இடையிலான கலாச்சார உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi), புது தில்லி(New Delhi) விரைவில் ரஷ்ய குடிமக்களுக்கு இலவச விசா திட்டம் அறிமுகப்படுத்தபடும் என்று தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் உள்ள ஹைதராபாத்(Hyderabad) மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்(Vladimir Putin) ஒரு கூட்டு செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய குடிமக்களுக்கு 30 நாள் இலவச இ-சுற்றுலா விசா(e-tourist visa) மற்றும் 30 நாள் குழு சுற்றுலா விசாவை(group tourist visa) இந்தியா விரைவில் அறிமுகப்படுத்தும் என்று அறிவிப்பதில் பிரதமர் மோடி மகிழ்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நமது மக்களை இணைப்பது மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் புதிய பலத்தையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். அதை மேம்படுத்துவதற்காக இன்று இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தொழில் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றிலும் நாங்கள் இணைந்து செயல்படுவோம். இரு நாடுகளின் மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே பரிமாற்றங்களையும் அதிகரிப்போம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தடையின்றி எரிபொருளை வழங்க முன்வந்துள்ள ரஷ்யா – இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால்!




