இந்தியாவில் ரயிலில் நால்வர் சுட்டுக்கொலை

ரயிலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்தியாவில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) கான்ஸ்டபிள் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சேத்தன் குமார் என்ற இந்த கான்ஸ்டபிள், இந்திய ரயில்வே காவலர் மூத்த அதிகாரி மற்றும் மூன்று பயணிகளைக் கொன்றுள்ளார்.
அவர் எதற்காக கொலைகளை செய்தார் என்பது இதுவரையில் வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, சேத்தன் குமார் அவசரகாலத்தில் ரயிலை நிறுத்தப் பயன்படுத்தப்படும் உள் எச்சரிக்கை அமைப்பைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றார், ஆனால் மும்பை அருகே கைது செய்யப்பட்டார்.
(Visited 15 times, 1 visits today)