முன்னாள் ஹார்வர்டு தொழிலாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை
புகழ்பெற்ற ஹார்வர்ட்(Harvard) மருத்துவப் பாடசாலையின் முன்னாள் பிணவறை(Mortuary) மேலாளருக்கு, அறிவியல் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்ட உடல் பாகங்களைத் திருடி விற்றதற்காக எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
2018 முதல் மார்ச் 2020 வரை உள் உறுப்புகள், மூளை, தோல், கைகள் மற்றும் துண்டிக்கப்பட்ட தலைகள் உள்ளிட்ட திருடப்பட்ட எச்சங்களை கடத்தியதாக 58 வயதான செட்ரிக் லாட்ஜ்(Cedric Lodge) குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மே 2023ல் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று ஹார்வர்ட் தெரிவித்துள்ளது.
லாட்ஜும் அவரது மனைவி டெனிஸும்(Denise) பாஸ்டனுக்கு(Boston) அருகிலுள்ள பாடசாலையில் இருந்து உடல் பாகங்களை நியூ ஹாம்ப்ஷயரின்(New Hampshire) கோஃப்ஸ்டவுனில்(Goffstown) உள்ள தங்கள் வீட்டிற்கும், மாசசூசெட்ஸ்(Massachusetts) மற்றும் பென்சில்வேனியாவில்(Pennsylvania) உள்ள இடங்களுக்கும் எடுத்துச் சென்று பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு அனுப்பியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
65 வயதான டெனிஸ் லாட்ஜுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதித்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.




