பிரித்தானியாவில் புலம்பெயர காத்திருப்போருக்கான அறிவிப்பு! நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக புலம்பெயர்வோருக்கெதிரான புதிய சட்டங்களை மீண்டும் அறிமுகம் செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இதற்கமைய, சட்டவிரோதமாக புலம்பெயர்வோருக்கெதிரான புதிய கட்டுப்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வெளிநாட்டுப் பிரஜைகள் பிரித்தானிய குடிமக்களாக ஆவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடியுரிமைக்கான முதல் படியாக, பிரித்தானியாவில் தொடர்ச்சியாக வசிக்கும் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து எட்டு ஆண்டுகளாக நீட்டிப்பதற்கு உள்துறை அலுவலக அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
மேலும், விண்ணப்பதாரர்கள் இரண்டு வருடங்கள் பிரித்தானியாவில் வேலை செய்திருக்க வேண்டும் அல்லது பாடசாலைகளில் படித்திருக்க வேண்டும்;
ஒரு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பத்து வருடங்கள் குற்றச்செயல்களுக்கான தண்டனை இல்லாதவராக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரித்தானிய வாழ்க்கை பற்றிய அறிவு சோதனைகளில் இருந்து விலக்கு நீக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் குடியேற்றக் கொள்கைகளை தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக்கிய பிறகு இவை அனைத்தும் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.