இங்கிலாந்தில் உச்சம் தொட்ட காய்ச்சல் பாதிப்பு – நிரம்பி வழியும் தீவிர சிகிச்சைப்பிரிவு!
இங்கிலாந்தில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் உச்சம் தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NHS வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய, கடந்த வாரம் சராசரியாக தினமும் 3,140 பேர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கடந்த வாரத்தில் மாத்திரம் தினமும் 316 படுக்கைகள் நிரம்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
குளிர்கால வைரஸ்கள் மற்றும் ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையின் தாக்கம் காரணமாக மருத்துவமனைகள் ‘இன்னும் ஆபத்தான சூழ்நிலைக்கு அருகில் இருப்பதாக NHS எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்பு செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங், NHS இல் உள்ள குறிப்பிடத்தக்க அழுத்தத்தை எடுத்துரைத்து, மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள காய்ச்சல் தடுப்பூசியைப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்.





