சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட சக கைதி உயிரிழப்பு
கைதிகளால் தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான கைதி சிகிச்சை பலனின்றி நேற்று (26) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் ஊழல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 35 times, 1 visits today)





