WhatsApp அறிமுகம் செய்த Favourites அம்சம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நேற்று, ஜூலை 16 புதிய அப்டேட்டை அறிவித்தது. அதாவது ‘ஃபேவரைட்ஸ்’ (Favourites) அம்சம் அறிமுகம் செய்வதாக கூறியது.
இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களுக்கு முக்கியமான நபர்களின் ஷேட், குரூப்களை எளிதாகக் கண்டறியும் வழி செய்யும் வகையில் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த அம்சம் மூலம் உங்கள் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ், குடும்ப உறுப்பினர்களை ‘ஃபேவரைட்ஸ்’ அம்சத்தில் சேர்த்து விரைவாக ஷேட் செய்யலாம். ஷேட் மட்டுமல்லாமல் வாட்ஸ்அப் காலிங் வசதியிலும் இந்த ஃபேவரைட்ஸ் அம்சத்தை பயன்படுத்த முடியும்.
ஃபேவரைட்ஸ் அம்சம் பயன்படுத்துவது எப்படி?
1. ஷேட் பக்கம் சென்று ஃபேவரைட்ஸ் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும். அங்கு உங்களுக்கு வேண்டிய contacts or groups there செலக்ட் செய்யவும்.
2. இப்போது செட்டிங்ஸ் சென்று Favourites > Add to Favourites கொடுக்கவும்.
3. இப்போது உங்கள் ஃபேவரைட்ஸ் லிஸ்ட் ரெடியாகி விடும்.