ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பிரபல எழுத்தாளர் – தகாத நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

பிரித்தானியாவின் சிறந்த குழந்தைகள் எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் டேவிட் வொலியம்ஸ்(David Walliams), வெளியீட்டாளர் ஹார்பர்காலின்ஸ் UK (HarperCollins UK) அவரது புத்தகங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திய பின்னர், தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

அவருக்கு எதிராக எதையும் உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் அவர் எந்த விசாரணையிலும் பங்கேற்கவில்லையென்றும் Walliams இன்
செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மற்றும் அவர் மீதான தகாத நடத்தை குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.

ஹார்பர்காலின்ஸ் UK, புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் தலைமையில் Walliams இன் புத்தகங்களை வெளியிடாத தீர்மானத்தை எடுத்துள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த செய்தித் தொடர்பாளர் “தனிநபர்களின் தனியுரிமையை மதித்து, உள் விடயங்களில் கருத்து தெரிவிக்க மாட்டோம்” என்றார்.

டேவிட்வொலியம்ஸ் 55 மொழிகளில் 60 மில்லியனுக்கும் மேலான புத்தக பிரதிகளை விற்பனை செய்துள்ளார்.

அவர் ஹார்பர்காலின்ஸ் மூலம் வெளியிட்ட முக்கியமான புத்தகங்கள்- தி பாய் இன் தி டிரெஸ், கேங்ஸ்டா கிரானி, பில்லியனர் பாய் மற்றும் சமீபத்தில் சாண்டா & சன். சில புத்தகங்கள் தொலைக்காட்சிக்கு மாற்றப்பட்டுள்ளன.

வாலியம்ஸ் TV மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் பிரபலமாக உள்ளார். 2017 இல் தொண்டு மற்றும் கலை சேவைகளுக்காக OBE விருதையும் பெற்றார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!