யாழில் மாடியிலிருந்து வீழ்ந்த குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணத்தில் மாடியிலிருந்து தவறி வீழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் (15) தாவடிப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வேலை செய்துகொண்டிருந்த போது தவறி முதல் மாடியில் வீழ்ந்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.





