மெக்சிகோவில் உச்சக்கட்ட வெப்பம் – அழிந்துபோகும் அபாயத்தில் குரங்குகள்
மெக்சிகோவில் 234 ஹொவ்லர் (howler) குரங்குகள் வெப்ப அலையில் உயிரிழந்துள்ளன.
ஹொவ்லர் குரங்குகள் அருகிவரும் உயிரினமாகப் போற்றப்படுகின்றன. அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.
டபாஸ்கோ மாநிலத்தில் உள்ள காடுகளில் அவை உயிரிழந்துள்ளதாக Cobius என்கிற வனவிலங்கு லாப நோக்கமில்லா நிறுவனம் தெரிவித்தது.
குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே குரங்குகள் உயிரிழந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டது. சென்ற மாதம் சுமார் 85 ஹொவ்லர் வகை குரங்குகள் உயிரிழந்துள்ளன.
வெப்பநிலை 45 டிகிரி செல்சியசைத் தாண்டியதோடு வறட்சியாலும் அவை பாதிக்கப்பட்டன. மழைக் காலம் தொடங்கிவிட்டாலும் குரங்குகளின் நிலை உடனே மாறிவிடாது என Cobius குறிப்பிட்டது.
அந்தக் குரங்குகள் வேட்டை, வசிப்பிடம் அழிதல், புதிய நோய்கள் ஆகியவற்றாலும் அவதிப்படுகின்றது.
குறிப்பாக, குரங்குகளின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.