இலங்கை செய்தி

புறக்கோட்டையில் காலவதியான பால் மா!! நாட்டின் பல பாகங்களுக்கும் விற்பனை

புறக்கோட்டையில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்கு தயாராக இருந்த 825 கிலோ காலாவதியான பால்மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனை மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று, புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் விசேட சோதனை நடத்தியதுடன், அங்கிருந்த பால் மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு விற்பனையாளர்கள் இந்த காலாவதியான பால்மாவை எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை