ஐரோப்பாவே ரஷ்யாவின் அடுத்த இலக்கு – நேட்டோ பொதுச் செயலாளர் எச்சரிக்கை!
சகிப்பு தன்மையுடன் போருக்கு தயாராகுமாறும், ரஷ்யாவைத் தடுக்க பாதுகாப்புச் செலவினங்களை விரைவாக அதிகரிக்குமாறும் நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) இன்று அறிவுறுத்தியுள்ளார்.
ஐரோப்பா ரஷ்யாவின் “அடுத்த இலக்கு” என்றும், நேட்டோ “ஏற்கனவே ஆபத்தில் உள்ளது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆயுதப் படைகளுக்குத் தேவையான வளங்கள் இருப்பதை உறுதிசெய்ய, நேச நாட்டுப் பாதுகாப்புச் செலவுகளும் உற்பத்தியும் விரைவாக உயர வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக ரஷ்யா இராணுவப் பலத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று ரூட்டே மேலும் தெரிவித்தார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திட்டம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய தலைவர்களுடன் விவாதித்துள்ள நிலையில், மார்க் ரூட்டேவின் கருத்துக்கள் வந்துள்ளன.





